பிப். 28 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால், வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் பிப். 28 முதல் மார்ச் 19 வரை நடக்கவுள்ளது. கால், வாய் கேமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்நோய் தடுப்பூசி போடாமல் இருத்தல், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பால் ஏற்படுகிறது. 2 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் 3 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகள், கால்நடைகளுக்கு கால், வாய் கோமாரி நோய் முகாமில் பங்கேற்று தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment