3ம் ஆண்டு துவக்க விழா

விருதுநகர்,: விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விருதுநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். 100 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. விருதுநகர் தெப்பம் கிழக்கு பஜாரில் 1,000 நபர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் கமல் கண்ணன், இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, நரி்வாகிகள் சங்கர், நாகேந்திரன், விஜயக்குமார், நெல்சன், நிக்கோலஸ், கவியரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment