சிவகாசி : சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் துறை டெக் ஜோன் மன்றம் சார்பில் பொருள்களின் இணையம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாணவி சிந்து வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அறிவியல் பாடக்குழு இயக்குநர் பார்வதி பேசினார். மாணவன் யோக பிரசாத் நன்றி கூறினார்.
Read MoreDay: February 26, 2020
sfr college
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி மாணவிகள் விருதுநகரில் நடந்த முதல்வர் கோப்பை ஜூடோ போட்டியில் பங்கேற்று வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்றனர். மேலும் மதுரை காமராஜர் பல்கலை அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி, உடற்கல்வி இயக்குநர் விஜயகுமாரி, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
Read Moreமுதல்வர் வருகை ஆலோசனைக்கூட்டம்
விருதுநகர் : விருதுநகரில் புதிதாக அமைய உள்ள மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வருகை தர உள்ளதை அடுத்து விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கண்ணன், பொது சுகாதாரம் இணை செயலாளர் சிவஞானம் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: விருதுநகரில் ரூ.380 கோடி மதிப்பில் அமையும் மருத்துவ கல்லுாரிக்கு மார்ச் 1ல் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். புதிய திட்டங்கள், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்கின்றனர். தாலுகா வாரியாக பயனாளிகள் வந்து செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். அந்தந்த தாலுகாக்களுக்கு விழா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.டி.ஆர்.ஓ., உதயக்குமார், எஸ்.பி., பெருமாள், சப் கலெக்டர் தினேஷ்குமார், ஊரக திட்ட இயக்குனர் சுரேஷ்,…
Read Moreகல்லுாரியில் கருத்தரங்கம்
சாத்துார் : சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைவர் ராஜூ தலைமை வகித்தார். ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முதல்வர் மகேசன் துவக்கினார். அழகுசுந்தரம் வரவேற்றார்.எஸ்.பி., பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ ,டி. எஸ். பி.ராமகிருஷ்ணன் பேசினர். பேராசிரியர் மாலதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெண்கள்மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை செய்திருந்தனர்.
Read Moreகாரியாபட்டி
காரியாபட்டி ஆவியூர் புரோபல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் கோஜூகை ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி சார்பாக மாணவர்களுக்கிடையே கராத்தே பெல்ட் தேர்வு நடந்தது. பள்ளி தாளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.கராத்தே அமைப்பின் தலைவர் கார்த்திக், தொழில்நுட்ப தலைவர் பாக்கியராஜ், விருதுநகர் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள் அஜய்குமார், முனீஸ்வரன் கலந்து கொண்டனர். மார்ச் 8ல் நடக்கும் மாநில கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு நடந்தது. தலைமை ஆசிரியை சாந்தி தேர்வு பெற்றவர்களை பாராட்டினார்.
Read Moreவிருதுநகர் அருகே ஆர்.ஆர்.,நகரில் ராம்கோ சேவைக்கழகம்,
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆர்.ஆர்.,நகரில் ராம்கோ சேவைக்கழகம், சாத்துார் லட்சுமி பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ பரிசோதனை, விழிப்புணர்வு முகாம் நடத்தியது. தி ராம்கோ சிமெட் ட்ஸ் நிறுவன மூத்த உப தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தலைமை மருத்துவ அதிகாரி விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார். சாத்துார் லட்சுமி மருத்துவமனை டாக்டர் செல்வராஜ் தலைமையில் மருத்துவக்குழுவினர்கள் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். ஏற்பாடுகளை ராம்கோ சமுக சேவை கழக தொண்டர்கள் செயலாளர் தேவராஜா செய்தார்.
Read Moreகல்லூரியில் விளையாட்டு விழா..
ராஜபாளையம் : ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லுாரி, சக்கினி அம்மாள் பி.எட்., கல்லுாரி விளையாட்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் ஜமுனா வரவேற்றார். கல்லுாரி செயலர் ஷியாம் தலைமை வகித்தார். கல்லுாரி கமிட்டி தலைவர் சந்திரசேகர் ராஜா, பி.எட்., கல்லுாரி முதல்வர் சாந்தகுமாரி, மனநல மருத்துவர் அர்ஜூனன் பேசினர்.உடற்கல்வி துறை இயக்குனர் ரஞ்சுஷா ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் சித்ராதேவி விருந்தினரை அறிமுகம் செய்தார்.மாணவிகள் தேவிமீனா, மரிய அமலா விளையாட்டில் சிறந்த மாணவிகளாக தேர்வு பெற்றனர். பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த, வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மாணவியர் சங்க தலைவி அபர்ணா நன்றி கூறினார்.
Read Moreஅலட்சியத்தால் அலங்கோலம்; பரமாரிப்பு இல்லா நகராட்சி பூங்காக்கள்
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி பூங்காக்கள் பல கோடிக் கணக்கில் செலவழித்தும் முறையான பரமாரிப்பு இல்லாது பயன்பாட்டிற்கு வராமல் வீணாகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிகள் மூலம் அந்தந்த பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூங்காவும் குறைந்தபட்சம் 25 லட்சம் நிதியில் அமைக்கப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் ‘வாக்கிங்’ செல்லவும், உட்கார்ந்து இளைபாறவும், உடற்பயிற்சி செய்யும் நோக்கில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் இருக்ககை, சிறுவர்கள் விளையாட்டு கருவிகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. பெரும்பாலான பூங்காக்கள் பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில பூங்காக்கள் திறப்பு விழா காணாமலே வீணாகின்றன. இவற்றிற்கு செலவிடப்பட்ட கோடிக் கணக்கான நிதியும் வீணாகிறது.அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் 5 க்கு மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 25 லட்சம் நிதிக்கு மேல் செலவழித்து கட்டப்பட்டுள்ளது.…
Read Moreவிருதுநகர் மாவட்டம் 26.02.2020
திருத்தங்களில் உள்ள S.N.புரம் ரோடு ஜங்ஷனில் திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுடலைமணி, தலைமை காவலர்கள் திரு. விஜயன், திரு. சுரேஷ் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு. சரவணன் ஆகியோர் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறிப்பாக தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர். விருதுநகர் மாவட்ட காவல்துறை
Read Moreஎன்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா
நியூயார்க் : பிரபல ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2004இல் தன் பதின் பருவ வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலகை அதிர வைத்தவர் தான் மரியா ஷரபோவா. சில ஆண்டுகளுக்கு முன் பார்மை இழந்தார். பல முறை காயம் காரணமாக சரியாக ஆட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். 2016இல் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, இரு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். பின் மீண்டும் டென்னிஸ் ஆடி வந்த மரியா ஷரபோவா, தற்போது தன் 32 வயதில் யாரும் எதிர்பாராத நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 1994 முதல் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த ரஷ்ய பெண்ணான மரியா ஷரபோவா, டென்னிஸ் அரங்கில் ரஷ்ய நாட்டு வீராங்கனையாக பங்கேற்றார். 2004இல் விம்பிள்டனில், அப்போது…
Read More