அலட்சியத்தால் அலங்கோலம்; பரமாரிப்பு இல்லா நகராட்சி பூங்காக்கள்

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி பூங்காக்கள் பல கோடிக் கணக்கில் செலவழித்தும் முறையான பரமாரிப்பு இல்லாது பயன்பாட்டிற்கு வராமல் வீணாகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிகள் மூலம் அந்தந்த பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூங்காவும் குறைந்தபட்சம் 25 லட்சம் நிதியில் அமைக்கப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் ‘வாக்கிங்’ செல்லவும், உட்கார்ந்து இளைபாறவும், உடற்பயிற்சி செய்யும் நோக்கில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் இருக்ககை, சிறுவர்கள் விளையாட்டு கருவிகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.

பெரும்பாலான பூங்காக்கள் பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில பூங்காக்கள் திறப்பு விழா காணாமலே வீணாகின்றன. இவற்றிற்கு செலவிடப்பட்ட கோடிக் கணக்கான நிதியும் வீணாகிறது.அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் 5 க்கு மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 25 லட்சம் நிதிக்கு மேல் செலவழித்து கட்டப்பட்டுள்ளது. ஆனால் அஜீஸ் நகரில் உள்ள சிறுவர் பூங்காவை தவிர மற்றவை காட்சி பொருளாக உள்ளன.

அனைத்தும் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் செடிகள் வளர்ந்து பாழாகி வருகின்றன. இவற்றை பராமரிப்பதில் நகராட்சிகள் மெத்தனம் காட்டுகின்றன. நகராட்சிகள் பூங்காக்களை பராமரிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment