கல்லூரியில் விளையாட்டு விழா..

ராஜபாளையம் : ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லுாரி, சக்கினி அம்மாள் பி.எட்., கல்லுாரி விளையாட்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

முதல்வர் ஜமுனா வரவேற்றார். கல்லுாரி செயலர் ஷியாம் தலைமை வகித்தார். கல்லுாரி கமிட்டி தலைவர் சந்திரசேகர் ராஜா, பி.எட்., கல்லுாரி முதல்வர் சாந்தகுமாரி, மனநல மருத்துவர் அர்ஜூனன் பேசினர்.உடற்கல்வி துறை இயக்குனர் ரஞ்சுஷா ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் சித்ராதேவி விருந்தினரை அறிமுகம் செய்தார்.மாணவிகள் தேவிமீனா, மரிய அமலா விளையாட்டில் சிறந்த மாணவிகளாக தேர்வு பெற்றனர். பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த, வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மாணவியர் சங்க தலைவி அபர்ணா நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment