முதல்வர் வருகை ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் புதிதாக அமைய உள்ள மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வருகை தர உள்ளதை அடுத்து விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் கண்ணன், பொது சுகாதாரம் இணை செயலாளர் சிவஞானம் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: விருதுநகரில் ரூ.380 கோடி மதிப்பில் அமையும் மருத்துவ கல்லுாரிக்கு மார்ச் 1ல் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். புதிய திட்டங்கள், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்கின்றனர். தாலுகா வாரியாக பயனாளிகள் வந்து செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். அந்தந்த தாலுகாக்களுக்கு விழா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.டி.ஆர்.ஓ., உதயக்குமார், எஸ்.பி., பெருமாள், சப் கலெக்டர் தினேஷ்குமார், ஊரக திட்ட இயக்குனர் சுரேஷ், ஏ.எஸ்.பி., சிவபிரசாத் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment