கணித்தமிழ் பேரவை தொடக்க விழா

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தமிழ்துறை மற்றும் தமிழாய்வு மையம் சார்பில் சென்னை தமிழ் இணைய கல்விக்கழகத்தின் நிதியுதவியுடன் கணித்தமிழ் பேரவை தொடக்க விழா நடந்தது. இளநிலை தமிழ்துறை தலைவர் அருள்மொழி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். மதுரை லேடி டோக் கல்லுாரி கணினி துறைத்தலைவர் ஜெயச்சந்திரா பேசினார். முதுநிலை தமிழ்துறை தலைவர் சிவனேசன் நன்றி கூறினார்.

Read More

பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

சிவகாசி: சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. சார்பு நீதிபதி மாரியப்பன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் வரவேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் பேசினர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பாதுகாப்பு அலுவலர் திருப்பதி நன்றி கூறினார்.சிவகாசி:சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் ஆங்கில துறை உதவி பேராசிரியர் பூர்ணிமா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் காந்திமதி தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி சிநேகமரியாள் நன்றி கூறினார்.

Read More

ஸ்ரீவில்லிபுத்துார்கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஐ.டி.ஐ.யில் 2020ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் விழா நடந்தது. பல்கலை இயக்குனர் சசிஆனந்த் தலைமை வகித்தார். மாணவர் சேர்க்கை அதிகாரி லிங்கசாமி, உதவி பதிவாளர் முனைவர் குருசாமிபாண்டியன் முன்னிலை வகித்தனர். முதல்வர் தங்கவேலு சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார். பயிற்சி அலுவலர் செல்வம் மற்றும் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.

Read More