பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

சிவகாசி: சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

சார்பு நீதிபதி மாரியப்பன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் வரவேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் பேசினர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பாதுகாப்பு அலுவலர் திருப்பதி நன்றி கூறினார்.சிவகாசி:சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் ஆங்கில துறை உதவி பேராசிரியர் பூர்ணிமா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் காந்திமதி தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி சிநேகமரியாள் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment