கல்லுாரியில் சிறப்பு கூட்டம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில் மாணவர்கள் அறிவுரை மையம் சார்பாக இளைஞர்களின் அதிகார மேன்மை மற்றும் ஆண், பெண் சமத்துவம் என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடந்தது.

நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன், முதல்வர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சந்திரவேல் வரவேற்றார். டான்பாஸ்கோ சமூக சேவை அமைப்பின் உதவி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் பேசினார்.

Related posts

Leave a Comment