கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

சிவகாசி:சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி உள்தர உத்தரவாத மையம், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து பொறியியல்

கல்வியில் பாடத்திட்ட மேம்பாடு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழும தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம் பேசினார்.

டீன் மாரிச்சாமி வரவேற்றார். பேராசிரியர் ரேணுகாதேவி, என்.ஐ.டி.டி.ஆர்., சிறப்பு

விருந்தினர்களை அறிமுகம் செய்தார். மைண்ட் மாஸ்டர்ஸ் லீடர்சிப் அகாடமி இயக்குநர் கவிதா, என்.ஐ.டி.டி.ஆர்., பேராசிரியர் சிவசங்கர் பேசினர். பல்வேறு நாடுகளை சேர்ந்த

பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி நிர்வாகம் உள்தர உத்தரவாத மையம்

ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ, பாலசுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment