பட்டாசு ஆலை விபத்து: இருவர் கைது

சிவகாசி:சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தினை தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

சிவகாசி அருகே மாரனேரி துரைச்சாமிபுரத்தில் கணேசனுக்கு சொந்தமான கே.ஆர்.எஸ்.

பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் பகல் 2:00 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி குருசாமி பலியானார். சின்ன முனியாண்டி 40, காயமடைந்தார். மாரனேரி போலீசார் பட்டாசு உரிமையாளர் கணேசன், ஆலை மேலாளர் வெற்றிச்செல்வம், போர்மேன் பெத்தன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து

வெற்றிச்செல்வன், பெத்தன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

Related posts

Leave a Comment