வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி

விருதுநகர்:மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் உள்ள 450 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 3,366 வார்டு உறுப்பினர்களுக்கு 2 நாள் அறிமுக பயிற்சி துவங்கியது.

இப்பயிற்சியானது அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. அருப்புக்கோட்டையில் காரியாபட்டி, திருச்சுழி,

அருப்புக்கோட்டை, நரிக்குடி வார்டு உறுப்பினர்களுக்கும், விருதுநகரில் சாத்துார், சிவகாசி, விருதுநகர் ஒன்றியங்களில் உள்ள வார்டு உறுப்பினர்ளுக்கும், ஸ்ரீவில்லிபுத்துாரில்

வத்திராயிருப்பு, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வார்டு உறுப்பினர்களுக்கும் பயிற்சி

அளிக்கப்பட்டது. விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்தார். ஊரக திட்ட இயக்குனர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஷ்ணுபரன், பி.டி.ஓ.,க்கள்., வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment