ஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர்.. நச்சுன்னு நாலு குத்து.. பூஜா ராணி வெற்றி!

அம்மான்: ஆசிய ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் பூஜா ராணி நுழைந்துள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டியில் ஆடும் தகுதியைப் பெற்று விட்டார். ஜப்பானின் டோக்யோவில் இந்த ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையாக பூஜா ராணி தகுதி பெற்றுள்ளார்.

அம்மான் நகரில் நடைபெறும் ஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர் போட்டியின் அரை இறுதியில் விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார். காலிறுதிப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் அவர் தாய்லாந்து வீராங்கனை பூர்னிப்பா சுட்டியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Related posts

Leave a Comment