விருதுநகர் நீதிமன்றத்தில் மகளிர் தின விழா

விருதுநகர்:விருதுநகர் சட்ட பணிகள் குழு, விருதுநகர் பார் அசோஷியேஷன் மற்றும் விருதுநகர் அட்வகேட் அசோஷியேஷன் சார்பில் மகளிர் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் விருதுநகர் வழக்கறிஞர்கள் சங்க கட்டடத்தில் நடந்தது.

சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் பொன் சீனிவாசன், விருதுநகர் அட்வகேட் அசோஷியேஷன் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முத்து சாரதா, நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி மருதுபாண்டி, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பாரி, நீதித்துறை நடுவர் சிவராஜேஸ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முகக்கனி, மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி பரிமளா பேசினர். தமிழ் திரைப்படங்கள் பெண்களை பெருமைப்படுத்துகிறதா, பெருமைப்படுத்தவில்லையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விருதுநகர் நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் வைத்தீஸ்வரி நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment