வைமா பள்ளி ஆண்டு விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் வைமா கல்வி குழும பள்ளிகளின் ஆண்டு விழா பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டுவிழா மண்டபத்தில் நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் ,ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன் கலந்து கொண்டனர். வைமா கல்வி குழும சேர்மன் திருப்பதிசெல்வன் வரவேற்றார் மேனேஜிங் டிரஸ்டி அருணா தலைமை வகித்தார். விருதுநகர் நோபிள் பள்ளி சேர்மன் ஜெரால்டு ஞானரத்தினம், தாளாளர் விர்ஜின் இனிகோ பரிசுகள் வழங்கினர். வைமா வித்யாலயா துணை முதல்வர் கற்பகலட்சுமி நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment