விருதுநகர் மாவட்டம் 11.03.2020 காரியாபட்டி தாலுகா எசலிமடை கிராமத்தில் வசித்து வரும் பத்மாவதி என்பவர் காரியாபட்டி காவல் நிலையம் வந்து காலையில் பள்ளிக்கு சென்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளை காணவில்லை என்று கொடுத்த புகாரை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. தமிழழகன் அவர்கள் உட்பட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விரைந்து செயல்பட்டு காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர். இந்த செயலை பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். விருதுநகர் மாவட்ட காவல்துறை #girlsavenews #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs …
விருதுநகர் மாவட்டம் 11.03.2020
