ஆர்.ஆர்.நகரில் மகளிர் தின விழா

விருதுநகர்:விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். திருநங்கைகள், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கரகாட்டம், கோலாட்டம், பாடல், சிலம்பாட்டம், நாடகம் என கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நரிக்குடி வட்ட கட்டமைப்பின் சார்பில் மகளிர் தின விழிப்புணர்வு ஜோதி வழங்கப்பட்டது. சப் கலெக்டர் தினேஷ்குமார், துணை கலெக்டர் சரஸ்வதி, திட்ட இயக்குனர்கள் சுரேஷ், தெய்வேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்லப்பா, காளிமுத்து பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment