தேவை விழிப்புணர்வு: அதி வேகத்தில் செல்லும் டூ வீலர்கள்: அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கை

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் டூவீலரில் அதிவேகமாக செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதோடு டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் டூவீலர் பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். தங்களது பணியினை விரைந்து முடிக்கவும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லவும் டூவீலரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. தற்போது டூவீலர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். டூ வீலரை பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பெரும்பாலும் மதிப்பதில்லை. 

குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சற்று முன்னதாகவே கிளம்பி மெதுவாக செல்வதில்லை. எங்கு சென்றாலும் தாமதமாக கிளம்பி பின்னர் அதி வேகத்தில் பறக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் டூவீலரை கண்மூடித்தனமாக அசுர வேகத்தில் ஓட்டி செல்கின்றனர். இளம் கன்று பயமறியாது என்பது உண்மைதான். ஆனால் பயப்பட வேண்டியவற்றிற்கு பயந்துதானே ஆக வேண்டும். 

முறையாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஹெல்மெட் அணியாமலும் வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். இதில் கொடுமை என்ன வென்றால் தவறு செய்தவர் விபத்தில் சிக்குவது மட்டுமல்லாமல் சம்பந்தமே இல்லாத நபர்கள் மீது மோதுவதால் அவர்களும் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.

நகரங்களில் சிறிய தெருக்களிலும், பள்ளி, கல்லுாரி பகுதிகளிலும் அதி வேகத்தில் செல்கின்றனர். பெரிய வாகனங்கள் வந்தால் டூ வீலரில் செல்பவர்கள் வழி விடுவதில்லை. ஜாலிக்காக ‘ஓவர் ஸ்பீடில்’ சென்று விபத்தில் சிக்குபவர்கள் அதிகரித்து விட்டனர். இன்னும் சிலர் ‘குடித்து’ விட்டு நிதானம் இல்லாமல் வேகமாக சென்று விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைகளில் டூவீலரில் செல்பவர்கள் அனைத்து வாகனங்களையும் முந்தி செல்ல வேண்டும் என்பதற்காக விபத்தில் சிக்குகின்றனர். 

Related posts

Leave a Comment