டெண்டர் விட்டு 3 மாதமாச்சு ரோடு பணிகளை காணோம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பணிகள் நடக்கவில்லை. அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி – ராமசாமிபுரம் ரோடு ஒன்றரை கி.மீ., வரை உள்ளது. இந்த ரோடு கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திபட்டி, ஜெயராம் நகர், கணேஷ் நகர் உட்பட பகுதிகளிலிருந்து நகருக்குள் செல்லாமல் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், நகராட்சி, கருவூலம், பள்ளிகள், கல்லுாரிகள், வங்கிகளுக்கு செல்ல வசதியாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக ரோடு அமைக்காததால் கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சைக்கிள்கள் ‘டயர்’ பஞ்சர் ஆகி விடுகிறது. இதனால் 2 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. நகரில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பணிகள் தாமதப்படுகிறது.ரோட்டை புதியதாக அமைத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல்…

Read More

உடைந்த குடிநீர் குழாய்; சீரமைப்பு தாமதத்தால் அவதி

சாத்துார்:சாத்துார் கீழக்காந்திநகரில் உடைந்த குடிநீர் குழாயை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் தாமதம் செய்வதால் கடந்த 20 நாட்களாக பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். கீழக் காந்தி நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் விரிவாக்க பணிகள் நடந்துவருகிறது. இதற்காக மேன்ஹோல், குழாய் பதிக்க மண் அள்ளும் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதில் வீடு, பொது குடிநீர் குழாய் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. பொதுவாக பாதாள சாக்கடை பணி நடக்கும் போது இது போன்று குடிநீர் குழாய் உடைந்தால் ஓரிரு நாட்களில் பாதாள சாக்கடை பணியை மேற் கொள்ளும் ஒப்பந்தாரர்களே உடைப்பை சரி செய்வது வழக்கம். ஆனால் கீழக் காந்திநகரில் 20 நாட்களுக்கு மேலாகியும் குழாய் உடைப்பு சரி செய்யாத நிலையில் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். முன்னாள் கவுன்சிலர் மோகன் கூறியதாவது: 20 நாட்களாகி உடைப்பை சரி செய்யவில்லை.…

Read More

கண்மாய் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்யுங்க: ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில் முறையீடு

ராஜபாளையம்:கண்மாய்களின் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்ய ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் வலியுறுத்தினார்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சிங்கராஜ்(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சிவக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் துரை கற்பகராஜ் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் ஆப்சென்ட் ஆன நிலையில் பி.டி.ஓ., (ஊராட்சி)சத்தியவதி, மேலாளர் பாண்டீஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் விவாதம்— கந்தகிருஷ்ணகுமார் (அ.தி.மு.க., ) :ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டட அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், பரிந்துரைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தலைவர்: நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்

Read More

அறிவியல் தின விழா

விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் அறிவியல் தின விழா நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 பள்ளிகள் பங்கேற்றன. அறிவியல் கண்டு பிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. துவக்க விழாவில் செயலாளர் மீனா வரவேற்றார். தலைவர் வன்னியராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி உப தலைவர் சந்திரசேகரன், கணினி அறிவியல் துறை தலைவர் கதிர்வளவக்குமார் பேசினர். சிறந்த படைப்புகளைஉருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பழைய மாணவர் சங்க பொதுக்குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.

Read More

கொரோனா விழிப்புணர்வு

ராஜபாளையம்:ராஜபாளையம் நகராட்சி சார்பில ஜெயஜோதி மில் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமை வகித்தார். மில் பொது மேலாளர் வெங்கடேஷன், மேலாளர் நவநீதன், மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் சுந்தர் ராஜன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் காளி மாரிமுத்து, பழனிச்சாமி கலந்து கொண்டனர்.

Read More

‘கொரோனா’வால் இடம் பெயர்ந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்: ‘ஐ.டி., பார்க்’ ஆகும் தேனி கிராமங்கள்

தேவாரம் : ‘கொரோனா’ தாக்கத்தால் பெங்களூரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தேனி கிராமத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ‘கொரோனா’ இந்தியாவில் தொழில்களை நசுக்கி வருகிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு ஐ.டி., நிறுவனங்களும் விதி விலக்கல்ல. ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் ‘கொரோனா’வுக்கு பயந்து பெங்களூருவை சேர்ந்த ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனம் இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 பணியாளர்களுடன் செயல்படுகிறது. தேனி மாவட்டம் தேவாரம் டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த அரவிந்த், அமெரிக்காவை சேர்ந்த கேப்ரியல் ஆப்பிள்டன் இணைந்து ‘இன்ஸ்டாகிளீன்’ என்ற ‘ஆண்ட்ராய்டு’ ஐ.ஓ.எஸ்., செயலியை உருவாக்கும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனத்தை பெங்களூருவில் நடத்துகிறார். 20 பேர் வேலை பார்க்கும் இந்த நிறுவனத்தின் செயலியை 7 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ‘கொரோனா’வின் தாக்கத்தால் இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டது. ஊழியர்கள் அலுவலகம் வர அச்சமடைந்ததால்…

Read More

என் கருத்தை கொண்டுபோய் சேர்த்ததற்கு நன்றி: ரஜினி

சென்னை: அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் குறித்து எனது கருத்தை கொண்டு சென்ற பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அரசியலில் சில மாற்றங்களை விரும்புகிறேன், அதை செயல்படுத்த 3 திட்டங்கள் வைத்துள்ளேன் என ரஜினிகாந்த் இருதினங்களுக்கு முன்பு அறிவித்தார். தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. பின்னால் இருந்து செயல்படுவது மாதிரியான கருத்தையும் முன் வைத்தார். மக்கள் மத்தியில் புரட்சி வெடிக்க வேண்டும், மக்கள் மத்தியில் மாற்றம் நிகழ்ந்து எழுச்சி ஏற்பட்டால் அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறினார்.

Read More

‘கொரோனா’ வைரஸ் தடுப்பு: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு

சென்னை : ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டார். வெளிநாடுகளில் பரவிய, கொரோனா வைரஸ், அண்டை மாநிலங்களுக்கும் பரவ துவங்கி இருப்பது, மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் அச்சத்தை போக்கவும், நோய் பரவாமல் இருக்கவும், பரவினால் தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இது தொடர்பாக, தலைமை செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., தலைமையில், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி, வருவாய், சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்த முதல்வர், ‘தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க, அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

Read More

Renganayagi-Varatharaj-College-of-Engineering

ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி பாராட்டு விழாவில் பேசிய பொழுது#ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் #Website_link www.vlakshminarayanan.com

Read More