கண்மாய் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்யுங்க: ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில் முறையீடு

ராஜபாளையம்:கண்மாய்களின் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்ய ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் வலியுறுத்தினார்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சிங்கராஜ்(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சிவக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் துரை கற்பகராஜ் முன்னிலை வகித்தார்.

அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் ஆப்சென்ட் ஆன நிலையில் பி.டி.ஓ., (ஊராட்சி)சத்தியவதி, மேலாளர் பாண்டீஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் விவாதம்—

கந்தகிருஷ்ணகுமார் (அ.தி.மு.க., ) :ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டட அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், பரிந்துரைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தலைவர்: நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்

Related posts

Leave a Comment