‘கொரோனா’ வைரஸ் தடுப்பு: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு

சென்னை : ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டார்.

வெளிநாடுகளில் பரவிய, கொரோனா வைரஸ், அண்டை மாநிலங்களுக்கும் பரவ துவங்கி இருப்பது, மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் அச்சத்தை போக்கவும், நோய் பரவாமல் இருக்கவும், பரவினால் தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இது தொடர்பாக, தலைமை செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., தலைமையில், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி, வருவாய், சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்த முதல்வர், ‘தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க, அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

Related posts

Leave a Comment