#tnusrbsiresult #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.#tnusrbsiresult #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Read More

விருதுநகர் மாவட்ட காவல்துறை

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.தங்கம் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர் திரு.தங்கபாண்டியன் ஆகியோர், சுகாதாரதுறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சொக்கநாதன்புத்தூர் சோதனைச் சாவடி வழியே வரும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு நோய்த்தொற்று தடுப்பு மருந்தினை தெளித்தனர். #koronaawareness #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Read More

இதற்கு ஓர் வழி காணுங்க

சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் பல காம்பவுண்ட் இன்றி கட்டப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் பல மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டடங்களும் கட்டித் தரப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மடிக்கணினி விலையில்லா சைக்கிள் போன்ற பொருட்கள் பள்ளி வகுப்பறையில் வைக்கப்படுகின்றன. இவற்றை சமூக விரோதிகள் திருடி செல்வதும் சேதப்படுத்தவும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சிலர் பள்ளி கட்டடத்தில் அமர்ந்து மது குடிப்பதுடன் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் விட்டு செல்லும் மது பாட்டில்கள், புகையிலை கழிவுகளை பார்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் வேதனையுடன் அகற்றும் நிலை உள்ளது. கண்ணாடி ஜன்னல்கள், மேஜைகளை சேதப்படுத்துகின்றனர். உடைந்த கண்ணாடி பொருட்களால் மாணவர்கள் காயமடையும் சம்பவங்களும்…

Read More

பி.எட்., கல்லுாரியில் கலை விழா

சாத்துார்: சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் மேட்ட மலைச்சாரல் என்ற தலைப்பில் அனைத்து பி.எட்., கல்லுாரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட கலை விழா நடந்தது. தலைவர் கி.ராஜூ தலைமை வகித்தார். முதல்வர் ரதீஷ் முன்னிலை வகித்தார். பேராசிரியை ஜூலி வரவேற்றார். ஆலோசகர் கோபால கிருஷ்ணமூர்த்தி பேசினார். மதுரை தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் தங்கவேல் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினார். கவிதை போட்டி, ஓவியப்போட்டி, புகையில்லா சமையல் போட்டி, மவுன மொழி, குறுநாடகம் என 10க்கு மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பத்மா சங்கீத நடனம் மற்றும் இசைப்பள்ளி நிறுவனர் சங்கீத கணேஷ், த.மு. எ.க.ச. மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், சண்முகம் கற்பகா காலண்டர் உரிமையாளர் ஜெய்சங்கர் நடுவர்களாக இருந்தனர். பேராசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

Read More

பற்றாக்குறையில் போலீஸ் சிறப்பு பிரிவுகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.சி.ஐ.டி., லஞ்சஒழிப்புதுறை, கியூபிராஞ்ச் உட்படபல்வேறு சிறப்பு பிரிவு போலீசில் போதியளவிற்கு போலீசார் இல்லாமல் பற்றாக்குறை நிலவுவதால் குற்றங்கள் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் வழக்கமான சட்டம் ஒழுங்கு போலீசார் மட்டுமின்றி நடக்க உள்ள குற்றங்களை முன்கூட்டியே கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார், முக்கிய வழக்குகளை கையாளும் சி.பி.சி.ஐ.டி., அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சங்களை தடுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ், வெடிபொருட்கள் மற்றும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் கியூபிராஞ்ச், திருட்டு சம்பவங்களை விசாரிக்கும் கிரைம்பிரிவு என பல்வேறு பிரிவுகள் போலீசில் செயல்பட்டு வருகிறது.இத்துறையினரின் சரியான செயல்பாட்டில் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இத்துறையில் போதியளவிற்கு போலீசார் இல்லாமலும், காலிப்பணியிடங்கள் நிவர்த்தி செய்யபடாமலும் இருப்பதால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் கண்டறியபட்ட குற்ற வழக்குகளை தொடர்ந்து நடத்தமுடியாமலும் போலீசார் தவித்து வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி.,பிரிவில் மிகவும் குறைந்த அளவிற்கே…

Read More

பள்ளியில் முப்பெரும் விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிப்புத்துார் இடையன்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் உலக நுகர்வோர் உரிமை தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.மாநில நிறுவனர் தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கண்ணன், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர். நந்தகோபன்முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர். சந்தனமாரி குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட செயலாளர் தங்கவேல்வரவேற்றார்.ஸ்ரீவில்லிப்புத்துார் டி.எஸ்.பி., ராஜேந்திரன் பரிசு வழங்கினார். வழக்கறிஞர்கள்சுப்ரமணியன், இளங்கோ, செல்வம், மாநில துணைத் தலைவர் கோவிந்தன், மாநில செயற்குழு கமிட்டி ஜெயகுமார், கிளை தலைவர் சங்கிலிகளை பேசினர். தமிழாசிரியை வைதேகி நன்றி கூறினார்.

Read More

கல்லுாரியில் கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியின் இயற்பியல் துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட இயற்பியல் பொருட்களின் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன், பொருளாளர் மதிவாணன், முதல்வர் முத்துச்செல்வன்முன்னிலை வகித்தனர். துறை தலைவர் கணேசன் வரவேற்றார். கோவை பாரதியார் பல்கலை பேராசிரியர் ெபான்பாண்டியன், புசுச்சேரி பல்கலை பேராசிரியர் தங்கதுரை பேசினர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் மீனாட்சி, நிர்மலாதேவி செய்தனர். பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

Read More

மருத்துவமனை செலவு தொகையாவது தாருங்க: பட்டாசு விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளி முறையீடு

விருதுநகர்: விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளி ‘மருத்துவமனைக்கு செலவிட்ட தொகையாவது தாருங்கள்’ என கலெக்டர் கண்ணனிடம் முறையிட்டார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கை கழுவும் முறை குறித்து பொதுமக்கள், அரசு அலுவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.காரியாபட்டி நந்திக்குண்டு ஊராட்சி மேலத்துலுக்கன்குளம் கிராமத்தினர் அளித்த மனுவில், விவசாய நிலங்களில் தனியார் நிறுவனங்கள் 35 ஏக்கரில் சோலார் அமைக்க உள்ளனர். சோலார் அமைத்தால் நிலத்தின் வழியாக கிராம விவசாயிகள் விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு வர இயலாது. இங்கு சோலார் அமைக்க தடை விதிக்க வேண்டும், என கேட்டுள்ளனர்.சாத்துார் சின்னக்காமன்பட்டி அன்னலட்சுமி அளித்த மனுவில், “கடந்த பிப் 19ல் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் விபத்து…

Read More