அரசு பஸ் அதிகாரி சஸ்பெண்ட்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர்களை ஆபாசமாகவும், மிரட்டும் வகையில் பேசிய தொழில் நுட்ப துணைமேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்துார் அரசு போக்குவரத்து கழக உதவி செயற்பொறியாளர் கண்டியராஜா. இவரை விருதுநகர் தலைமையிட தொழில்நுட்ப துணைமேலாளர் பாலசுப்பிரமணியன் அலைபேசியில் ஆபாச மாக மிரட்டும் வகையிலும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. உதவிபொறியாளர்கள் மதுரைஅரசு போக்குவரத்துகழக நிர்வாக இயக்குனர், விருதுநகர் எஸ்.பி.,யிடமும் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் துணைமேலாளர் பாலசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து மதுரை கோட்ட நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment