கல்லுாரியில் கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியின் இயற்பியல் துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட இயற்பியல் பொருட்களின் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன், பொருளாளர் மதிவாணன், முதல்வர் முத்துச்செல்வன்முன்னிலை வகித்தனர். துறை தலைவர் கணேசன் வரவேற்றார். கோவை பாரதியார் பல்கலை பேராசிரியர் ெபான்பாண்டியன், புசுச்சேரி பல்கலை பேராசிரியர் தங்கதுரை பேசினர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் மீனாட்சி, நிர்மலாதேவி செய்தனர். பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment