பள்ளியில் முப்பெரும் விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிப்புத்துார் இடையன்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் உலக நுகர்வோர் உரிமை தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.மாநில நிறுவனர் தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கண்ணன், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர். நந்தகோபன்முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர். சந்தனமாரி குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட செயலாளர் தங்கவேல்வரவேற்றார்.ஸ்ரீவில்லிப்புத்துார் டி.எஸ்.பி., ராஜேந்திரன் பரிசு வழங்கினார். வழக்கறிஞர்கள்சுப்ரமணியன், இளங்கோ, செல்வம், மாநில துணைத் தலைவர் கோவிந்தன், மாநில செயற்குழு கமிட்டி ஜெயகுமார், கிளை தலைவர் சங்கிலிகளை பேசினர். தமிழாசிரியை வைதேகி நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment