பி.எட்., கல்லுாரியில் கலை விழா

சாத்துார்: சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் மேட்ட மலைச்சாரல் என்ற தலைப்பில் அனைத்து பி.எட்., கல்லுாரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட கலை விழா நடந்தது. தலைவர் கி.ராஜூ தலைமை வகித்தார். முதல்வர் ரதீஷ் முன்னிலை வகித்தார். பேராசிரியை ஜூலி வரவேற்றார். ஆலோசகர் கோபால கிருஷ்ணமூர்த்தி பேசினார். மதுரை தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் தங்கவேல் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினார். கவிதை போட்டி, ஓவியப்போட்டி, புகையில்லா சமையல் போட்டி, மவுன மொழி, குறுநாடகம் என 10க்கு மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பத்மா சங்கீத நடனம் மற்றும் இசைப்பள்ளி நிறுவனர் சங்கீத கணேஷ், த.மு. எ.க.ச. மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், சண்முகம் கற்பகா காலண்டர் உரிமையாளர் ஜெய்சங்கர் நடுவர்களாக இருந்தனர். பேராசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment