மருத்துவமனை செலவு தொகையாவது தாருங்க: பட்டாசு விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளி முறையீடு

விருதுநகர்: விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளி ‘மருத்துவமனைக்கு செலவிட்ட தொகையாவது தாருங்கள்’ என கலெக்டர் கண்ணனிடம் முறையிட்டார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கை கழுவும் முறை குறித்து பொதுமக்கள், அரசு அலுவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.காரியாபட்டி நந்திக்குண்டு ஊராட்சி மேலத்துலுக்கன்குளம் கிராமத்தினர் அளித்த மனுவில், விவசாய நிலங்களில் தனியார் நிறுவனங்கள் 35 ஏக்கரில் சோலார் அமைக்க உள்ளனர். சோலார் அமைத்தால் நிலத்தின் வழியாக கிராம விவசாயிகள் விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு வர இயலாது. இங்கு சோலார் அமைக்க தடை விதிக்க வேண்டும், என கேட்டுள்ளனர்.சாத்துார் சின்னக்காமன்பட்டி அன்னலட்சுமி அளித்த மனுவில், “கடந்த பிப் 19ல் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. 3 பேர் இறந்தனர். நான் உட்பட 4 பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். என்னை தவிர 3 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 3 நபர்களும் இறந்து விட்டனர். நான் மட்டும் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். வயது முதிர்வு காரணமாக முழுமையாக சிகிச்சை பெற முடியவில்லை. இன்று வரை பட்டாசு ஆலை உரிமையாளரோ, குத்தகைக்கு நடத்தியவர்களோ ஆறுதல் கூறவில்லை. எந்தவித உதவியும் செய்யவில்லை. நான் அரசு மருத்துவமனையில் இருந்தபோது கலெக்டர் கண்ணன் மட்டும் பார்த்தார். பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்தவர் நஷ்ட ஈடு வழங்க மறுக்கிறார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ரூ.1 லட்சம் கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். செலவு செய்த தொகையை நஷ்ட ஈடாக வழங்க உரிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கேட்டுள்ளார்.அலுவலகத்தை அணுகலாம்சாத்துார் ஆர்.டி.ஓ., காளிமுத்து கூறுகையில், ‘பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்கள், பலியானவர்கள் என அனைவருக்கும் ஆலை நிர்வாகம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. யாரும் விடுபட வாய்ப்பில்லை. விடுபட்டிருந்தால் சாத்துார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம், என்றார்.இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் லிங்கம் அளித்த மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் 7,98,607 மின் இணைப்புகள் உள்ளன. வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கை 7 லட்சமாகும். ஒவ்வொருவரும் மின் இணைப்பு பெற்ற கால அளவு வேறுபடும். தற்போது மின்வாரியத்திலிருந்து வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளில் உள்ள மின் மோட்டார்கள் அனைத்தையும் மாற்றி புதிய மின் மீட்டர்கள் பொருத்தி வருகின்றனர். மின்மீட்டர்களில் 3 சீல்கள் உள்ளது. இந்த 3 சீல்களில் ஏதாவது ஒன்று விடுபட்டிருந்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கின்றனர். புதிய மீட்டர் பொறுத்த ரூ.50ம் வசூலிக்கின்றனர். மாவட்டத்தில் தொடர் வறட்சியால் விவசாயம் பாதித்து சிறுதொழில் நசிந்து வருகிறது. மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இந் நிலையில் மின் மீட்டர்கள் மாற்றுகிறோம் என்ற பெயரில் பழைய மின் மீட்டர்களை கழற்றும் போது கம்பி அறுந்தாலும், சீல் விட்டாலும் பயன்படுத்துவர்கள் தான் பொறுப்பு என்று சொல்லி அபராதம் விதிக்கின்ற முறை மக்களை பாதிக்கிறது. புதிய மின் மீட்டர் பொருத்தும் போது பழைய மின் மீட்டருக்கு ஏற்படும் சேதாரத்தை காரணம் காட்டி மக்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும், என கேட்டுள்ளனர்.முறைகேடுநரிக்குடி ஒன்றியம் அ.முக்குளம் சின்னதம்பி அளித்த மனுவில், நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் அ.முக்குளம் ஊராட்சி தலைவராக போட்டியிட்டேன். எதிர்தரப்பினர் முறைகேட்டில் தன்னுடைய முகவர்களை ஓட்டும் போடும் இடத்திற்கு வரவிடாமல் செய்துவிட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்த பின் எவ்வளவு ஓட்டு பதிவாகி உள்ளது என அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதில் கூறவில்லை. இறுதிவரை பதிவான ஓட்டுகளின் கணக்கு தாளை தரவே இல்லை. ஓட்டு எண்ணிக்கையில் தங்கபாண்டி வெற்றி பெற்றார். இதையடுத்து முறைகேடுகள் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுஓட்டுப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்,’ என கேட்டுள்ளனர். மனு அளித்த இவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது அதிகாரிகள், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related posts

Leave a Comment