விருதுநகர் மருத்துவமனையில் ‘கொரோனா’வுக்கு தனி வார்டு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில், ‘கொரோனா’வுக்கு ஏழு படுக்கை வசதிகளுடன் தனிப்பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

‘கொரோனா’ வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையினர், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்களிடம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.விருதுநுகர் அரசு மருத்துவமனையில்மருந்துகள் மற்றும் ஏழு படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம் என மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் அரசு மருத்துவமனை நிலைய உறைவிட மருத்துவர் அரவிந்த் பாபு கூறியதாவது:கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டியதில்லை.

இதுவரை நம் பகுதியில் யாரும் பாதிக்கப்படவில்லை.அதற்கான அறிகுறிகளுடன் கூட யாரும் சிகிச்சைக்கு வரவில்லை. அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் தனிப்பிரிவும் தயார் நிலையில் உள்ளது. இருமல், சளி உள்ளவர்கள் மருத்துவரை பார்க்காமல் கடைகளில் தானாக மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளை தேவையின்றி மருத்துவமனைகள், அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவ வேண்டும், என்றார்.

Related posts

Leave a Comment