விழிப்புணர்வு முகாம்..

காரியாபட்டி: காரியாபட்டியில் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பாக சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார். கொரோனா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுப்பது, கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், சுலோகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. முக்கியமாக காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கை கழுவுவது பற்றிய செயல்முறை விளக்கங்களை ஆசிரியர்கள் செய்தனர்.

Related posts

Leave a Comment