கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பொது சுகாதார துறை சார்பில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனை விளக்க கூட்டம் நடந்தது.

பள்ளி சுகாதார மருத்துவர் அரவிந்த் செல்வன் தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சித்திக், வினோத்குமார் முன்னிலை வகித்தனர். பொது மக்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க கை கழுவுதல் முறை பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பஸ்சில் சென்ற பயணிகள், காத்திருந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related posts

Leave a Comment