women’s day special program

கருவில் இருக்கும் கணங்களிலே பல இன்னல்களை பார்த்தவள் …
தாய்ப்பால் தவிர கள்ளிப்பால் முதற்கொண்டு பார்த்தவள்…
மகளை பிறந்து மானுடப் பிறப்பிற்கு பெருமை சேர்த்தவள்…
பருவம் அடைந்து உயிருக்கு உயிர் கொடுக்க ஆயத்தம் ஆனவள் …

கல்லூரி காலங்களில் வசந்தத்தை தூநீங்கும் தந்தவள்…
காலையில் பூக்கும் மலர்களுக்கு அவசியத்தை அளித்தவள் …
கார்மழை பொழிந்திடும் காரணமானவன் …

கலைப் பூசும் சித்திரம் அவள் …
விடையறியா விசித்திரம் அவள் …
பிறப்பிலேயே இரு வீடுகள் கொண்டவள் …
வயது எட்டியதோ இல்லையோ ஆனாலும் மணமுடித்து சென்றவள் …

கணவனின் கரம் பிடித்து காரிகையாய் நின்றவள் …
சினம் கொள்ளுகையில் கொற்றவையாய் கொன்றவன் …
உறவின் சான்றை வயிற்றில் கரு சுமந்தவள் …
நாற்பது வாரம் இமைக்காமல் உயிர் காத்தவள் …

பிரசவத்தின் அரும்பேர் வலி பொறுத்தவள் …
பொறுத்திருந்து நன்னுயிர் ஈன்றவள் …

மழலை கொஞ்சி மகிழ்ந்தவள் …
பேசும் மொழி கேட்டு நெகிழ்ந்தவள் …
ரத்தம் முறித்து பசி தீர்த்தவள் …
உளறும் மொழி கேட்டு சிலிர்த்தவள் …

மழையோடு தலை நனைத்தாள்
முந்தானை கொண்டு துவட்டியவள் …
பிழையோடு முன் நின்றாள்
தன் விழியாலே மிரட்டியவள் …

மாலை நேர உறக்கம் பொது மடி தந்தவள் …
அஞ்சறை பெட்டிக்குள் ஆயிரம் சுவை கொண்டவள் …
தனக்கென்று சமைக்காதவள் …
உடமை ஏதும் கொள்ளாதவள் …

அவள் ,
உலகத்தின் தொடக்கம்
அண்டத்தின் முற்றுப்புள்ளி
ஆதி அந்தம் உலகின்
அதிசய பிம்பம்

அவள்,
அன்னை
தங்கை
தமக்கை
தோழி என பரிமாணங்களை கொண்டவள் !!!
பெண் ..

Related posts

Leave a Comment