அகற்றலாமே

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் மேம்பாலங்களின் உறுதி தன்மையை குலைக்கும் வகையில் வளரும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மாவட்டதில் நான்குவழிச்சாலை உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் சிறிய மற்றும் பெரியளவில் மேம்பாலங்கள் உள்ளன. கோடிக்கணக்கான நிதிகளை செலவழித்து போக்குவரத்து சீராக இருக்கும் வகையில் மிக பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக கனரக வாகனங்கள், அதிக லோடு வாகனங்கள் செல்லும் வகையில் கட்டுமானம் உள்ளது. ஆனால் பாலத்தின் சுற்று சுவர்களில் செடி, கொடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இன்னும் சில பாலங்களில் மரங்கள் வளர்ந்துள்ளன.

இவற்றை முறையாக அகற்றாமல் விட்டதால் பாலத்தின் கீழிலிருந்து பாலத்தின் மேற்பகுதி வரை வளர்ந்துள்ளது. ஒருசில பாலங்களில் நீண்டு வளர்ந்துள்ள முட்செடிகள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. அடர்த்தியாக வளர்ந்துள்ள செடி மற்றும் முட்புதர்களின் வேர்கள்நாளடைவில் பாலத்தின் உட்பகுதி வரை சென்று பாலத்தின் உறுதி தன்மைக்கு வேட்டு வைக்கிறது. இதனால் பாலம் சேதமடைந்து விடும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ‘

பெரும்பாலான பாலங்கள் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளன. முன்பு சாலை பணியாளர்கள் பணியில் இருந்த போது பாலங்களில் வளர்ந்துள்ளெசடி, கொடிகளை அவ்வவ்போது அகற்றி பராமரிப்பு செய்து வந்தனர். தற்போது அவர்கள் பணியில் இல்லாததால் பராமரிப்பு பணி கேள்வி குறியாக உள்ளது. இதன் காரணமாக கோடிக் கணக்கான நிதியில் கட்டப்பட்ட மேம்பாலங்களின் உறுதி தன்மை அதில் வளர்ந்துள்ள செடிகளால் கேள்வி குறியாகிறது.பராமரிப்பு அவசியம்மேம்பாலங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

பராமரிப்பு இல்லையென்றால் பாலங்களின் உறுதி தன்மை குறைந்து பாலங்கள் சேதமடையும் நிலைக்கு சென்று விடும். சுற்று சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை வேரோடு எடுத்து. மீண்டும் முளைக்காத வகையில் பராமரிக்க வேண்டும்.- தவமணி, தனியார் ஊழியர், அருப்புக்கோட்டை.

Related posts

Leave a Comment