முன்னாள் மாணவர்கள் கூட்டம் பள்ளி, கல்லுாரி செய்திகள்

சிவகாசி : சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது.

1995ல் படித்த மாணவர்வகள், 25 ஆண்டும் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் வெள்ளி விழாவாக கொண்டாடினர். முன்னாள் மாணவர் சங்க தலைவர் முருகேசன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் அசோகன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சிவக்குமார், காளிதாசன், ரூபசவுந்தர் பேசினர். சங்க பொருளாளர் மோசஸ்டேனியல் பிரபாகர் நன்றி கூறினார். செயலாளர் ஆனந்தராஜ், பாண்டிமுருகன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment