இப்போ விழுமோ… எப்போ விழுமோ…

விருதுநகர் மாவட்டத்தில் நகர்புறம் , கிராமபுறம் என எல்லா இடங்களிலும் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. பல இடங்களில் மின்கம்பங்கள் இப்போ விழுமோ, எப்போ விழுமோ என்ற நிலையில் தான் உள்ளது. பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. காற்று பலமாக வீசினாலோ மழைக்காலங்களிலோ மின்கம்பம் விழுந்து விடுமோ என்ற பயத்துடனே தெருவில் நடமாட வேண்டியுள்ளது என்கின்றனர் மக்கள். இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related posts

Leave a Comment