காலையில் பிரசன்ட்: மாலையில் ஆப்சென்ட்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்களின் நலன்கருதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலையில் செயல்பட்ட மருத்துவகுழுவினர் மாலையில் இல்லாததால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதாரநிலையம், பெரியமாரியம்மன் கோயில், ஆண்டாள் கோயில்,சிவன்கோயில்களில் கிருமிநாசினி தெளிக்கும்பணி நடந்தது.இந்நிலையில் ஆண்டாள் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வரலாம் என்பதால் மருத்துவ குழுவினர் பக்தர்களை பரிசோதித்தபின்னர் கோயிலுக்குள் அனுப்பினர். காலை முதல் கோயில் நடை அடைக்கும்வரை ஒரு டாக்டரும், மருந்தாளுனரும் எவ்வித மருத்துவகருவிகளும் இல்லாமல் விழிப்புணர்வு விளக்கங்கள், நோட்டீஸ்களை வழங்கினர். பின்னர் மாலையில் கோயில் நடைதிறக்கபட்டநிலையில் எவ்வித மருத்துவகுழுவினரும் இல்லை. இதனால் கோயிலுக்கு வந்த குறைந்தளவு பக்தர்களும், எவ்வித மருத்துவ சோதனையின்றி கோயிலுக்கு சென்றனர். இதனால் கோயில்களில் மருத்துவபரிசோதனை என்பது கண்துடைப்பான பணியா என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment