கொரோனா வதந்தி: டி.எஸ்.பி., எச்சரிக்கை

நரிக்குடி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பி பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். நரிக்குடி அ.முக்குளத்தில் ஆட்டோ டிரைவரை கொரோனா தாக்கியதாக நியூஸ் சேனலில் ஒளிபரப்பியது போன்றுதவறான செய்தியை சமூக வலைதளங்களில்பரப்பினர்.இதனால் ஆட்டோ டிரைவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரித்ததில் அதுபோன்று எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியினர்நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.வதந்தி பரப்பியவர்களை கண்டுபிடிக்க திருச்சுழி டி.எஸ்.பி., சசிதர் நடவடிக்கை எடுத்ததோடு வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Related posts

Leave a Comment