நிலவேம்பு கஷாயம் போல் சுரக்குடிநீர் கொரோனா தடுக்க சித்தாவில் ஏற்பாடு

விருதுநகர்: கொரோனா தடுக்க நிலவேம்பு கஷாயம் போல் சுரக்குடிநீர் பயன்படுத்த சித்த மருத்துவ துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.டெங்கு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் மக்களிடம் பரவலாக அச்சமே பரவி கிடந்தது. அப்போது சித்த மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட நிலவேம்பு கஷாயம் டெங்குவை பாதிப்பை வெகுவாக குறைத்தது. இதையடுத்து மக்களிடமும் டெங்கு குறித்த அச்சம் நீங்கியது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு தடுக்க மழை காலங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று தற்போது கொரோனாவுக்கும் சித்த மருத்துவம் தீர்வு காணுமா, கொரோனா பாதிப்பை ஒழிக்க ஏதேனும் கஷாயம் கொண்டு வருமா என பொதுமக்களும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் எதிர்பார்க்க துவங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று விருதுநகர் சித்த மருத்துவ பிரிவு வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வழிமுறை போர்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் கை கழுவுவதற்கு திரிபலா கஷாயத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோல் வாத சுரக்குடிநீர், கப சுரக்குடிநீரை சித்த மருத்துவத்தின் கொரோனா தடுப்பு மருந்துகளாக முதன்மைபடுத்தப்பட்டிருந்தது.வாத சுரக்குடிநீரானது பெருங்காஞ்சொரி வேர், நிலவேம்பு, திப்பிலி மூலம், சிறுகாஞ்சொரி, கண்டஙகத்திரி, சுக்கு, சிற்றரத்தை, பேரரத்தை உள்ளிட்ட 21 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கப சுரக் குடிநீர் ஆடாதோடை, கற்பூரவள்ளி, சீந்தில் கொடி, கடுக்காய் தோல், கோஸ்டம், சிறுதேக்கு, கோரைக்கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இக்குடிநீர் பன்றி காய்ச்சலுக்கு மருந்தாக வழங்கப்படுவது குறிப்பிடதக்கது. கொரோனா பாதிப்பு தீவிரமடையும் பட்சத்தில் அதிலிருந்து காக்கவும் சித்த மருத்துவத்தில் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதில் தேசிய அளவில் செயல்படும் ஆயுஷ் அமைப்பு டெங்கு தடுப்பு நிலவேம்பு கஷாயம் போல் கொரோனா தடுக்க வாத, கப சுரக்குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக சித்த மருத்துவ டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment