chennai/coronavirus-youngsters-playing-cricket-at-t-nagar-in-chennai/articlecontent-

சென்னை: சென்னை என்று கூறியதும் சட்டென அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை, சட்டசபை கட்டிடம்.. அடுத்தபடியாக தி.நகர். சென்னையில் உள்ள மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்.. அவ்வளவு ஏன், அண்டை மாநிலங்களில் இருந்து கூட ஷாப்பிங் செய்வதற்கான ஒரு பகுதியாக மக்கள் நினைப்பது தி.நகர். புடவை வேண்டுமா, நகை வேண்டுமா, செருப்பு வேண்டுமா, குண்டூசி முதல் விமானம் வரை ஒரே இடத்தில் கிடைக்கும் என்பார்களே, கிட்டத்தட்ட அது போன்ற ஒரு இடம் தான் சென்னை தி.நகர்.

எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும். அதிலும் பண்டிகை காலம் என்று சொல்லிவிட்டால், மேலே இருந்து ஒரு பொருளைப் போட்டால் அது தரையில் சென்று விழாது.. யாராவது ஒருவரின் தலையில் தான் விழும் என்கிற அளவுக்கு இடைவெளியின்றி மக்கள் கூட்டம், நெரிசல் காணப்படும்.

Related posts

Leave a Comment