Bose venkat

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்து, கையில் கிடைத்த வேலை எல்லாம் செய்து, நீண்ட காலத்திற்கு பின் நடிகராகி, கன்னிமாடம் என்ற படத்தின் மூலம், இப்போது இயக்குனரும் ஆகியுள்ள, ‘போஸ்’ வெங்கட்: சொந்த ஊர் அறந்தாங்கி. பல கனவுகளுடன் சென்னையில் வந்து இறங்கிய இடம் அரும்பாக்கம். கோடம்பாக்கம் சென்று பெரிய சினிமா நடிகராக மாற வேண்டும் என்பது தான் இலக்காக இருந்தது.எனினும், குடும்ப சூழ்நிலைக்காக, லாரி  எனினும், குடும்ப சூழ்நிலைக்காக, லாரி கிளீனர், டிரைவர், காஸ் சிலிண்டர் லோடுமேன் என, கிடைத்த வேலை எல்லாம் செய்தேன். அதன் பிறகு தான், ஆட்டோ டிரைவர் ஆனேன்.வயிற்றுப் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டுவது, கனவுக்காக சினிமாவில் நடிப்பதற்காக அலைவது என இருந்தேன்.அத்துடன் படிப்பது, கதை எழுதுவது, சினிமாவில் வாய்ப்புகள் தேடுவது என, ஓடிக் கொண்டே இருந்தேன். அதற்கு, ஆட்டோக்காரன்…

Read More

சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 6 பேர் பலி

சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 6 பேர் பலி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிப்பிப்பாறையில் ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. 5 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  போலீஸ் விசாரணையில் டிஆர்ஓ கலெக்டர் லைசென்ஸ் பெற்று ஆபத்து இல்லாத வெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், விதிகளுக்கு மாறாக பேன்சி ரக வெடிகளை தயாரித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #sattur

Read More

vanathi vasi

Vasi vanathi என் ஆத்தா வடிக்கும் சுடுகஞ்சி சோற்று பருக்கைக்கு வந்து வரிசையில் நிற்கும். திண்ணையில் தாத்தாவின் கயிற்றுக் கட்டிலில் தலை சாய்த்தால் கூரையில் இதன் கூடுகள் மட்டுமே நிரம்பி கிடக்கும். பொழுதுபோக்கு சாதனங்கள் அற்ற அன்றைய தாத்தா வீட்டில் இவைகளின் “க்ரீச் க்ரீச்” சத்தத்தை கவனிப்பதுதான் தலையாய வேலை. குளவி முதல் குருவி வரை எந்த கூடையும் கலைத்ததே இல்லை தாத்தா. வீட்டினுள் மிக நெருக்கமாய் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து பறந்து கிடந்த சிட்டுக்களை தொலைத்து விட்டு கூண்டு பறவைகளை நடு வீட்டில் வைத்து ரசித்துக் கிடக்கிறோம்… … வாசி வாழ்வியல் மையம்.2/525வடமலைசமுத்திரம் ரோடு,கருத்தபிள்ளையூர் to பாபநாசம்அம்பாசமுத்திரம்திருநெல்வேலி 627418 தொடர்பு எண். 9677853412

Read More