சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 6 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிப்பிப்பாறையில் ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. 5 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீஸ் விசாரணையில் டிஆர்ஓ கலெக்டர் லைசென்ஸ் பெற்று ஆபத்து இல்லாத வெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், விதிகளுக்கு மாறாக பேன்சி ரக வெடிகளை தயாரித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#sattur