Bose venkat

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்து, கையில் கிடைத்த வேலை எல்லாம் செய்து, நீண்ட காலத்திற்கு பின் நடிகராகி, கன்னிமாடம் என்ற படத்தின் மூலம், இப்போது இயக்குனரும் ஆகியுள்ள, ‘போஸ்’ வெங்கட்: சொந்த ஊர் அறந்தாங்கி. பல கனவுகளுடன் சென்னையில் வந்து இறங்கிய இடம் அரும்பாக்கம். கோடம்பாக்கம் சென்று பெரிய சினிமா நடிகராக மாற வேண்டும் என்பது தான் இலக்காக இருந்தது.
எனினும், குடும்ப சூழ்நிலைக்காக, லாரி  எனினும், குடும்ப சூழ்நிலைக்காக, லாரி கிளீனர், டிரைவர், காஸ் சிலிண்டர் லோடுமேன் என, கிடைத்த வேலை எல்லாம் செய்தேன். அதன் பிறகு தான், ஆட்டோ டிரைவர் ஆனேன்.வயிற்றுப் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டுவது, கனவுக்காக சினிமாவில் நடிப்பதற்காக அலைவது என இருந்தேன்.அத்துடன் படிப்பது, கதை எழுதுவது, சினிமாவில் வாய்ப்புகள் தேடுவது என, ஓடிக் கொண்டே இருந்தேன். அதற்கு, ஆட்டோக்காரன் தொழில் வாய்ப்பாக இருந்தது. ஆட்டோவில் சவாரிக்கு சென்று கொண்டிருப்பேன். அப்படியே, சினிமா கம்பெனிகளில் வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருப்பேன். அப்போது தான் ஒரு நாள், மெட்டி ஒலி ‘டிவி’ தொடருக்கான, கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருந்தது; அதில் கலந்து கொண்டேன். அதில் தேர்வானதும், மகிழ்ச்சி ஏற்பட்டது.நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் நடிப்பு திறமை, இந்த தேர்வு மூலம் நிரூபணமாகியுள்ளது என்ற எண்ணம் பிறந்தது. இப்படித் தான், சின்னத்திரையில் நுழைந்து, பல சீரியல் களில் நடித்தேன். சென்னை ரவுடி ஆட்டோ சங்கர் கதை, சீரியல் ஆக்கப்பட்ட போது அதில் நடித்து, பெயர் பெற்றேன். தொடர்ந்து பல தொடர்களில் நடித்ததால், ரசிகர்களுக்கு என் முகம் தெரியத் துவங்கியது; அங்கீகாரம் கிடைத்தது. மேலும், தெருவில் செல்லும் போது, பொது இடங்களில் காணும் போது, என்னை அடையாளம் காணும் மக்கள், ஆர்வமாக பேசத் துவங்கினர். அது, நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை மேலும் அதிகரித்தது. ஒரு சமயம், இயக்குனர், நடிகர், சுந்தர்.சி யை சந்தித்தேன். அவர் என்னை வெகுவாக பாராட்டிய துடன், ‘சினிமாவில், இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு தேடு; கிடைக்கவில்லை என்றால், பழைய தொழிலுக்கே போய் விடு’ என, ஆலோசனை கூறினார்.இதுவரை, 83 படங்கள் பண்ணி விட்டேன். என்னை பொறுத்தவரை, ராதிகா, சுந்தர்.சி ஆகிய இருவரும், என் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாதவர்கள்.இப்போது, கன்னிமாடம் படத்தின் மூலம், இயக்குனராகவும் ஆகி விட்டேன். அந்த படம் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. நடிப்பதும், படம் இயக்குவதும், நீண்ட கால கனவு. இதில், எதை தொடரப் போகிறேன் என்பது, வாய்ப்புகளை பொறுத்தது!

Related posts

Leave a Comment