Kkssr Ramachandran

இன்று அருப்புக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் ஆய்வு செய்து தெரிந்து கொண்டேன் மற்றும் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தேன்…

Read More

திருவாரூர் தேரழகு!

திருவாரூர் தேரழகு!திருவிடைமருதூர் தெருவழகு!கும்பகோணம் கோயிலழகு!மன்னார்குடி மதிலழகு!வேதாரண்யம் விளக்கழகு! நேற்று சட்டப்பேரவைக் கேள்வி நேரத்தில்.😊

Read More

வாழ்விலொரு திருநாள்!

இன்றைக்குச் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி முடித்ததும், தலைவர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பு என் நெஞ்சத்தை நெகிழ வைத்தது. என் தலைவரின் வாழ்த்து எனக்குக் கிடைத்த வரம்; நான் பெற்ற உரம்!😊🙏 #பொக்கிஷம்

Read More

Thangam Thenarasu

சாத்தூர் அருகே சிப்பிப்பாறை பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த/ படுகாயமுற்ற தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்கு கொண்டு வந்தேன். முதல்வர் அவர்கள் ‘முதலமைச்சர் நிவாரண நிதி’ மூலம் தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Read More

கருத்தரங்கம்

சாத்துார் : சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. தலைவர் ராஜீ தலைமை வகித்தார். செயலர் பிருந்தா முன்னிலை வகித்தார். முதல்வர் மகேசன் வரவேற்றார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வாழ்த்தினார். சென்னை காயிதே இ மிலத் மகளிர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் ரமாமணி பேசினார். துணை முதல்வர் மாலதி நன்றி கூறினார்.

Read More

வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி பிரார்த்தனை

ஸ்ரீவில்லிபுத்துார் : கொரோனா நோய் அபாயத்திலிருந்து மக்களை காக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் நலமடைய வேண்டியும் ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி மக்கள் பிரார்த்தித்தனர். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயத்திலிருந்து இந்திய மக்களை காக்கும் விதமாக, நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அதனையேற்று நேற்று காலை முதல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரின் சில தெருக்களில், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு விளக்கேற்றி பிரார்த்தித்தனர். ஒரு தட்டில் மஞ்சள், மிளகு, வேப்பிலை வைத்து 2 மண்விளக்குகளை வைத்து, தங்கள் வீட்டின் முன்பு விளக்கேற்றினர். நோய் அபாயத்திலிருந்து மக்கள் நலம் பெற்று, எப்போதும் போல் வாழவேண்டும் என பிரார்த்தித்தாக தெரிவித்தனர்.

Read More

மகளிர் ராணுவ போலீஸ் பிரிவிற்கு தேர்வான அருப்புக்கோட்டை மாணவி

அருப்புக்கோட்டை : இந்திய ராணுவ தரைப்படை சிப்பாய் பணி மகளிர் பிரிவுக்கு, பெங்களூரு, ஷில்லாங், அம்பாலா, லக்னோ, ஜபல்பூர் ஆகிய 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பெங்களூருவில் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த4 பெண்கள் தேர்வாகினர். அதில், அருப்புக்கோட்டை அருகே காலப்பெருமாள்பட்டியைச் சேர்ந்த கற்பக லட்சுமி தேர்வாகியுள்ளார். கற்பகலட்சுமி:நான் ஸ்ரீ சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரியில் படிக்கும் போதே என்.சி.சி., யில் ‘பி’ கிரேடு மற்றும் ‘சி’ கிரேடு சான்றிதழ்கள் வாங்கியுள்ளேன். இதனால், எழுத்து தேர்வு எழுதாமல், மகளிர் ராணுவ போலீஸ் பிரிவில் பணி கிடைத்தது. சிறப்பாக பணி செய்து, ராணுவத்திற்கும், கல்லுாரிக்கும் சேர்ப்பேன். இம்மாணவியை விருதுநகர் 28 தமிழ்நாடு பட்டாலியன்…

Read More

நாம் ஒன்று சேர்ந்து கைதட்டினாலே…

விருதுநகர்: உலகில் அதிக உயிர்களை பலி வாங்கி கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மருத்துவக் குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிவுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் 300 பேரை தாண்டியுள்ளது. கொரோனாவை காட்டிலும் வேகமாக பரவி வரும் வதந்திகளை அரசாங்கமும் அடக்கி வருகிறது. இந்நிலையில் தங்களை அயராத பணியில் ஈடுபடுத்தி கொண்ட சுகாதார ஊழியர்கள், நர்ஸ்கள், டாக்டர்களின் சீரிய சேவையை போற்றும் வகையில் நேற்று மாலை 5:00 மணி முதல் 5:05 வரை கை தட்டி உற்சாகபடுத்துமாறு நாட்டின் குடிமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் கரகோஷங்கள் விண்ணை பிளந்தன. விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், டிராபிக் போலீசார் உட்பட பலர் கைதட்டி டாக்டர்களை உற்சாகப்படுத்தினர்

Read More