நாம் ஒன்று சேர்ந்து கைதட்டினாலே…

விருதுநகர்: உலகில் அதிக உயிர்களை பலி வாங்கி கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். மருத்துவக் குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிவுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் 300 பேரை தாண்டியுள்ளது. கொரோனாவை காட்டிலும் வேகமாக பரவி வரும் வதந்திகளை அரசாங்கமும் அடக்கி வருகிறது. இந்நிலையில் தங்களை அயராத பணியில் ஈடுபடுத்தி கொண்ட சுகாதார ஊழியர்கள், நர்ஸ்கள், டாக்டர்களின் சீரிய சேவையை போற்றும் வகையில் நேற்று மாலை 5:00 மணி முதல் 5:05 வரை கை தட்டி உற்சாகபடுத்துமாறு நாட்டின் குடிமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் கரகோஷங்கள் விண்ணை பிளந்தன. விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், டிராபிக் போலீசார் உட்பட பலர் கைதட்டி டாக்டர்களை உற்சாகப்படுத்தினர்

Related posts

Leave a Comment