மகளிர் ராணுவ போலீஸ் பிரிவிற்கு தேர்வான அருப்புக்கோட்டை மாணவி

அருப்புக்கோட்டை : இந்திய ராணுவ தரைப்படை சிப்பாய் பணி மகளிர் பிரிவுக்கு, பெங்களூரு, ஷில்லாங், அம்பாலா, லக்னோ, ஜபல்பூர் ஆகிய 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பெங்களூருவில் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த4 பெண்கள் தேர்வாகினர். அதில், அருப்புக்கோட்டை அருகே காலப்பெருமாள்பட்டியைச் சேர்ந்த கற்பக லட்சுமி தேர்வாகியுள்ளார்.

கற்பகலட்சுமி:நான் ஸ்ரீ சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரியில் படிக்கும் போதே என்.சி.சி., யில் ‘பி’ கிரேடு மற்றும் ‘சி’ கிரேடு சான்றிதழ்கள் வாங்கியுள்ளேன். இதனால், எழுத்து தேர்வு எழுதாமல், மகளிர் ராணுவ போலீஸ் பிரிவில் பணி கிடைத்தது. சிறப்பாக பணி செய்து, ராணுவத்திற்கும், கல்லுாரிக்கும் சேர்ப்பேன். இம்மாணவியை விருதுநகர் 28 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் முருகேசன் மற்றும் கல்லுாரி என்.சி.சி., அதிகாரி கணேசன், கல்லுாரி நிர்வாகமும் பாராட்டியது.

Related posts

Leave a Comment