‘மக்கள் ஊரடங்கு’; பஸ்கள் நிறுத்தம்; 30 ரயில்கள் ரத்து

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கை முன்னிட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. 419 அரசு பஸ்கள், 121 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. விருதுநகர் வழியாக செல்லும் 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

விருதுநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின் பஜார் வீதி, தேசபந்து மைதானம், தெப்பம் அதை சுற்றிய பகுதிகள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்கனவே வணிக பேரவையானது கடை அடைப்பை அறிவித்திருந்ததால் மெடிக்கல் கடைகளை தவிர வேற எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. விருதுநகரின் அனைத்து பகுதி மக்களும் முறையாக மக்கள் ஊரடங்கை கடைபிடித்து அரசுக்கு உதவினர்.

ஆள்நடமாட்டமில்லாததால் நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளாக கருதப்படும் பழைய பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார், தேசபந்து மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநீக்கம் செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார்ஸ்ரீவில்லிபுத்துார் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுஅளவில் அடைக்கப்பட்டிருந்தது. தெருக்கள் மற்றும் பஜார் வீதிகளில்மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்திருந்தது.

ஊரடங்கை மீறி, நகரில் இரு இடங்களில் செயல்பட்டு வந்த டீக்கடைகள், ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் கண்டித்தததையடுத்து, டீக்கடைகள் மூடப்பட்டது.ஆண்டாள் கோயிலில் கோயில் நடைமூடப்பட்டிருந்த நிலையில், பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள் நடந்தது. பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விரதமிருந்த பக்தர்கள், கோயில் வாசலில் அம்மனை வணங்கி சென்றனர். டாஸ்மாக் கடைகள் மூடபட்டிருந்தாலும், கூடுதல் விலை கொடுத்தாவது மதுபாட்டில்கள் வாங்குவதற்கு குடிமகன்கள், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.

Related posts

Leave a Comment