வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி பிரார்த்தனை

ஸ்ரீவில்லிபுத்துார் : கொரோனா நோய் அபாயத்திலிருந்து மக்களை காக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் நலமடைய வேண்டியும் ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி மக்கள் பிரார்த்தித்தனர்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயத்திலிருந்து இந்திய மக்களை காக்கும் விதமாக, நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அதனையேற்று நேற்று காலை முதல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரின் சில தெருக்களில், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு விளக்கேற்றி பிரார்த்தித்தனர். ஒரு தட்டில் மஞ்சள், மிளகு, வேப்பிலை வைத்து 2 மண்விளக்குகளை வைத்து, தங்கள் வீட்டின் முன்பு விளக்கேற்றினர். நோய் அபாயத்திலிருந்து மக்கள் நலம் பெற்று, எப்போதும் போல் வாழவேண்டும் என பிரார்த்தித்தாக தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment