விசைத்தறிகளும் இயங்காது

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் விசை தறி உற்பத்திபாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். செயலர் சரவணன் வரவேற்றார். முதல்வரின் ஆணைப்படி நகரில் உள்ள அனைத்து விசை தறிகளையும் மார்ச் 31 வரை நிறுத்தி வைப்பது, சிறு விசைத்தறி நெசவாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 5 ஆயிரம் 25 கிலோ அரிசி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத் தறி உரிமையாளர்கள் பெற்ற வங்கி கடன்களுக்கு மார்ச், ஏப்ரல் மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

Read More

தினமும் 5 ஆயிரம் ‘மாஸ்க்’ அசத்தும் அ.தி.மு.க., செயலாளர்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தினமும் 5 ஆயிரம் ‘மாஸ்க்’ வழங்கி வருகிறார் அ.தி.மு.க., நகர செயலாளர். கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ், வருவாய்துறை, நகராட்சி உட்பட துறைகள் நகரில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இவர்களுக்கு துணையாக அருப்புக்கோட்டை அ.தி.மு.க., நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன் தன் கட்சி நிர்வாகிகளுடன் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறார். நகரின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஜார் பகுதிகளில் ‘கைகழுவும் ‘சானிடைசர்’ வழங்க ஏற்பாடு செய்தார். கடந்த 2 நாட்களாக தினமும் 5 ஆயிரம் ‘மாஸ்க்’ களை வாங்கி புதிய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, அண்ணா சிலை பகுதி, திருச்சுழி ரோடு, அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்,…

Read More

தடை உத்தரவு எதிரொலி; நெரிசலில் சிக்கிய நகர்கள்

சிவகாசி : நேற்று மாலை 6:00 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை என அனைத்து நகர்களிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதியது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 6:00 மணி முதல் ஏப்.1 வரை தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவு பிறப்பித்தாலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருக்காது என அரசு தெளிவு படுத்தி உள்ளது. ஆனாலும் நேற்று முன்தினம், நேற்றும் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர். சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read More

மாநில கைப்பந்து போட்டி சிவகாசி அணிக்கு கோப்பை

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி அலுவலக பணியாளர்கள் தொடர்ந்து 2 வது முறையாக மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர். மதுரை டோக் பெருமாட்டி கல்லுாரியில் உடற்கல்வியியல் துறை சார்பில் கல்லுாரி அலுவலக பணியாளர்களுக்கு இடையே மாநில அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடந்தது. திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 13 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் தேனி மேரி மாதா கலை கல்லுாரியுடன் மோதிய சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதல் பரிசை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக்கோப்பை, ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது. அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல்வர் அசோக் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மதுரை காவல்துறை உதவி ஆணையர் ஜஸ்டின்…

Read More

தலைவருடன் மோதல் போக்கு ஊராட்சி செயலர் இடமாற்றம்

சிவகாசி : சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் ஊராட்சி செயலரை பணி மாறுதல் செய்து பி.டி.ஓ., உத்தரவிட்டார். சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் ஊராட்சி தலைவராக லீலாவதி வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஊராட்சி செயலர் சீனிவாசன் லீலாவதிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனால் ஊராட்சி செயலரை மாற்ற தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தார். கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலரை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு காலையில் பணிக்கு வந்த ஊராட்சி செயலர் அலுவலகம் பூட்டபட்டிருந்ததால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் விஷ்ணுபரன், ரவி பி.டி.ஓ., ஊராட்சி செயலரிடம் விசாரித்தனர். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி ஊராட்சி செயலர் சீனிவாசனை பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.அவரது செய்தி குறிப்பு: சித்துராஜபுரம் ஊராட்சி செயலர் மீது…

Read More

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 190 பேர் விருதுநகரில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் குழு கண்காணிக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு வெளி மாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் வீடு மற்றும் குடியிருப்பு பகுதியில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வீடுகளில் கண்காணிப்பில் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுகாதார இணை இயக்குனர் (பொறுப்பு)பிரகலாதன் கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து வந்த 190 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்,”என்றார்.

Read More

கலங்கிய மக்கள்; கலங்கடித்த வியாபாரிகள்; 144 தடை உத்தரவால் எகிறிய காய்கறி விலை

விருதுநகர் : கொரோனா 144 தடை உத்தரவை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவித்தும் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில் நேற்று மார்க்கெட்டிற்கு படையெடுத்த மக்களால் காய்கறிகள் விலையை மூன்று மடங்கு உயர்த்தி வியபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டினர். இதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய உணவு பாதுகாப்பு துறை எப்போதும் போல் தனது துாக்கத்தை இதிலும் கடைபிடித்ததால் பலரும் அதிருப்தியடைந்தனர். மக்களும் காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்கும் நோக்கத்தில் போட்டி போட்டு வாங்கினர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திய வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றனர். கிலோ ரூ. 10க்கு விற்ற தக்காளி ரூ.70, ரூ. 30 க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.120, சின்னபாகற்காய் ரூ.120, ரூ. 30க்கு விற்ற காரட் ரூ.170,…

Read More

கொரோனாவுக்காக 8 ஆயிரம் படுக்கைகள்; ஆதரவற்றோருக்கு உணவு வழங்க ஏற்பாடு: விருதுநகர் கலெக்டர் தகவல்

விருதுநகர் : ”விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 28 கல்லுாரி விடுதிகளில் 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக,”கலெக்டர் கண்ணன் கூறினார். விருதுநகரில் அவர் கூறியதாவது: கொரோனா தொற்று சம்பந்தமாக சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார்நிலையில் உள்ளன. தொற்று தீவிரமடையும் பட்சத்தில் 28 கல்லுாரிகளின் விடுதிகளில் 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 210 நபர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களில் 28 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட 59 நபர்களிடம் தனிமை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற நபர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டு அதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்ட எல்லையில் 16 இடங்களில் போலீசார் மூலமாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளே, வெளியே செல்வது கண்காணிக்கப்பட்டு தேவையற்ற…

Read More