தினமும் 5 ஆயிரம் ‘மாஸ்க்’ அசத்தும் அ.தி.மு.க., செயலாளர்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தினமும் 5 ஆயிரம் ‘மாஸ்க்’ வழங்கி வருகிறார் அ.தி.மு.க., நகர செயலாளர்.

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ், வருவாய்துறை, நகராட்சி உட்பட துறைகள் நகரில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இவர்களுக்கு துணையாக அருப்புக்கோட்டை அ.தி.மு.க., நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன் தன் கட்சி நிர்வாகிகளுடன் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறார். நகரின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஜார் பகுதிகளில் ‘கைகழுவும் ‘சானிடைசர்’ வழங்க ஏற்பாடு செய்தார். கடந்த 2 நாட்களாக தினமும் 5 ஆயிரம் ‘மாஸ்க்’ களை வாங்கி புதிய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, அண்ணா சிலை பகுதி, திருச்சுழி ரோடு, அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன், நகராட்சி அலுவலக பகுதியில் அனைவருக்கும் வழங்கி வருகிறார். பஸ்சில் வரும் கிராம மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மாஸ்க் அணிவதன் அவசியத்தை விளக்கி வழங்குவதோடு அணிந்து கொள்ள அறிவுறுத்துகிறார்.

இவருடன் நகர இலக்கிய அணி செயலர் புளியம்பட்டி சீனிவாசகன், முன்னாள் ஒன்றிய தலைவர் யோக வாசுதேவன், கூட்டுறவு சங்க தலைவர் கருப்பசாமி, அவை தலைவர் மணி, பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment