மாநில கைப்பந்து போட்டி சிவகாசி அணிக்கு கோப்பை

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி அலுவலக பணியாளர்கள் தொடர்ந்து 2 வது முறையாக மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லுாரியில் உடற்கல்வியியல் துறை சார்பில் கல்லுாரி அலுவலக பணியாளர்களுக்கு இடையே மாநில அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடந்தது. திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 13 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் தேனி மேரி மாதா கலை கல்லுாரியுடன் மோதிய சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதல் பரிசை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக்கோப்பை, ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது. அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல்வர் அசோக் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மதுரை காவல்துறை உதவி ஆணையர் ஜஸ்டின் பிரபாகர் கலந்து கொண்டார். வெற்றி பெற்றவர்களை கல்லுாரி தாளாளர் அபிரூபன் பாராட்டினார்.

Related posts

Leave a Comment