விசைத்தறிகளும் இயங்காது

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் விசை தறி உற்பத்திபாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். செயலர் சரவணன் வரவேற்றார். முதல்வரின் ஆணைப்படி நகரில் உள்ள அனைத்து விசை தறிகளையும் மார்ச் 31 வரை நிறுத்தி வைப்பது, சிறு விசைத்தறி நெசவாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 5 ஆயிரம் 25 கிலோ அரிசி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத் தறி உரிமையாளர்கள் பெற்ற வங்கி கடன்களுக்கு மார்ச், ஏப்ரல் மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment